431
***THF Heritage Video Release Announcement***
வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றுப் பதிவு: கந்தரோடை, ஸ்ரீலங்கா – புராதன பௌத்த சின்னங்கள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் தொல்லியல் துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் ப. புஷ்பரட்ணம் அவர்களுடன் ஒரு வரலாற்றுப் பதிவு
இலங்கையின் மிகப் புராதன குடியிருப்பு மையமான கந்தரோடை, வடயிலங்கையில் தொடர்ந்து தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும் இடம். தொல்லியல் திணைக்களம் இதன் தொடக்க காலம் ஆதி இரும்புக் காலமாகவும், பின்னர் பெளத்த சமய இடமாக வளர்ந்தது எனவும் காட்டுகிறது. தமிழக பௌத்தம் இதன் வளர்ச்சியில் கணிசமாகப் பங்காற்றியுள்ளது. ஆகவே இது குறிப்பிட்ட ஒரு இனத்தின் பெளத்த ஆதரவில் வளர்ந்ததாகக் கருதப்படுவதில்லை. தமிழகம் சீனம் ஆகியவற்றுடன் தொடர்பில் இருந்த பகுதி கந்தரோடை, ஸ்ரீலங்கா. பாளி இலக்கிய மொழியாகவும், பிராகிரதம் கல்வெட்டு மொழியாகவும் இருந்தது. மகாவம்சமும், பின்னர் சூலவம்சமும் இதன் வரலாற்றைக் குறிப்பிடுகிறது. பின்னர் சிங்கள மொழி ஆதிக்கம் பெற்றாலும், பாளி மொழி பௌத்தத் துறவிகளாலும், பல்கலைக்கழகம் வழியாகவும் இன்றும் புழக்கத்தில் உள்ளது. தேரவாத பௌத்தம் உருவவழிபாட்டை ஏற்காததால், பின்னர் புத்தரின் உடலுறுப்புகளை வைத்து ஸ்தூபிகள் கட்டப்பட்டதா ஐதீக அடிப்படையில் நம்பப்படுகிறது, ஆயினும் அறிவியல் முறையில் இது உறுதிப்படுத்தப் படவில்லை.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் தொல்லியல் துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் ப. புஷ்பரட்ணம் அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் மண்ணின் குரல் – மரபு காணொளி -வரலாற்றுப் பதிவு பதிவுக்காக கந்தரோடை – புராதன பௌத்த சின்னங்கள் குறித்த வரலாற்று மற்றும் தொல்லியல் தகவல்களைத் தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்த வரலாற்றுப் பதிவிற்கு உதவிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் தொல்லியல் துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் ப. புஷ்பரட்ணம் அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
யூடியூபின் THF i காணொளி வரிசையில் காண்க: https://youtu.be/HLtyM2p6G_Q
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]