வவுனியாவிலிருந்து மன்னார் தீவை இணைக்கும் பாலத்தை கடந்து மன்னார் தீவு சென்றபோது …
மன்னார் தீவில்..
முழங்காவில் – மாவீரர் நினைவு இல்லம். வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் சாலையில் இருக்கும் பகுதி. போருக்குப்பின் இப்பகுதி சிதைக்கப்பட்டது. ஒரு சிறு பகுதி மாத்திரமே என்று நமக்கு கிடைக்கின்றது.
போருக்குப் பின் இப்பகுதியில் 2014ம் ஆண்டு முடிக்கப்பட்ட சாலை. இப்பகுதி விடுதலைப் புலிகளின் கைவசம் இருந்தது.
அச்சமயம் இலங்கை காவற்படை தலைமையகத்தைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.
காணும் இடமெங்கும் பனை மரங்கள் நிறைந்து இருக்கின்றன. விடுதலைப் புலிகளின் அலுவலக பகுதிகள் என்று இலங்கை படையினரின் அலுவலகங்களாக மாற்றப்பட்டுள்ளது இங்கே வரிசை வரிசையாகக் காணமுடிகின்றது.
புவனகிரி நகரை நோக்கி வந்து கொண்டிருக்கின்றோம். இங்கு ஒரு சோழர்கால கோயிலைக் காண இப்போது சென்று கொண்டிருக்கின்றோம்.
சாலையில் நாவற் பழங்கள் விற்கும் தமிழ் வணிகர்.
மன்னித்தலை சிவன் கோயிலுக்குச் செல்லும் வழியில்.. கடற்கரையோர உப்பளங்கள் மற்றும் இறால் பிடிக்கும் பகுதி
மன்னார் தீவில் இந்த 1641 வரைபடத்தை இன்று மதியம் நேரில் சென்று ஆராய்ந்தோம்.
யாழ்ப்பாண குடாவிற்குமுன் கௌதாரிமுனை.
செங்கல், சுண்ணாம்பு, செந்துரை கற்களால் கட்டப்பட்ட ராஜேந்திர சோழன் காலத்துக் கோவில். டச்சுக்காரர் காலத்தில் கோயிலிலிருந்த சிவலிங்கம் காணாமல் போய்விட்ட நிலையில் ஊர்மக்கள் சிறிய லிங்கத்தை வாங்கி இங்கே வைத்து பூஜை செய்து வருகின்றனர். இன்று சரஸ்வதி பூஜை கொண்டாடுகின்றனர். இப்பகுதியில் ஏறக்குறைய 25 குடும்பங்கள் மட்டுமே இருக்கின்றன. சுண்டலும் அவலும் தயாரித்து எல்லோருக்கும் வழங்கினர். அனைவரும் அமர்ந்து பிரசாதத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.