Home காணொளி இலங்கை தமிழ் நாட்டுக் கூத்து

இலங்கை தமிழ் நாட்டுக் கூத்து

by Dr.K.Subashini
0 comment
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
இலங்கையின் பிரதேச ரீதியான நாட்டுக் கூத்து பல பாணிகளைக் கொண்டது.

  • மட்டக்களப்பு மரபில் வடமோடி தென்மோடி, மகுடிக் கூத்து, வாசாப்பு, வசந்தன்கூத்து ஆகியவை உள்ளன.
  • யாழ்ப்பாணப்பிரதேசத்தில் வடமோடி தென்மோடி, கத்தோலிக்கப் பாங்கு, வசந்தன்கூத்து..

அதுமட்டுமன்று

  • வட்டுக் கோட்டை மரபு
  • காத்தவராயன் மரபு என்பனவும் ..
  • மன்னார் பிரதேசத்தில் வடபாங்கு தென்பாங்கு, மாதோட்டப்பாங்கு, கத்தோலிக்க மரபு, வாசாப்பு என்பன..
  • முல்லைத்தீவு பிரதேசத்தில் முல்லைத்தீவு பாங்கு – கண்ணகி கூத்து, கோவலன் கூத்து ஆகியன முக்கியமாக அமைந்திருக்கின்றன..
  • வன்னிப்பிரதேசத்தில் காத்தவராயன் கூத்து
  • மலையகத்தில் அர்ச்சுனன் தபசு, பொன்னர் சங்கர், காமன் கூத்து..
இப்படி, பிரதேசத்துக்குப் பிரதேசம் மாறுபடுகின்றது இலங்கைத் தமிழர் கூத்துக்கலை மரபின் பாணி.
இதனை விளக்கி ஆடிக்காட்டுகின்றனர் லண்டன் நகரில் Tamil Theatre & Visual Arts நிறுனத்தினரின் இயக்குனர்களான ரஜிதா சாம், சாம் ப்ரதீபன் தம்பதியர்.
இந்தக்கூத்து நிகழ்ச்சி கடந்த 10.10.2015 பாரீஸ் நகரிஸ் நடைபெற்ற ஐரோப்பிய தமிழ் மாநட்டில் இடம்பெற்ற நிகழ்ச்சியாகும்
35 நிமிட விழியப் பதிவு இது.

இப்பதிவில் பிரதேச ரீதியாக உள்ள வேறுபாட்டினை  விவரிக்கும் விதமாக
கட்டியக்காரன் தன்னுடைய பாத்திரப் படைப்பை விளக்கும் வகயில் தொடங்கப்படுகின்றது.
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
அன்புடன்
சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

You may also like

Leave a Comment