Home நூல்கள் இலங்கையிலிருந்து தாயகம் திரும்புகின்றவர்களுக்கு ஒரு வழிகாட்டி

இலங்கையிலிருந்து தாயகம் திரும்புகின்றவர்களுக்கு ஒரு வழிகாட்டி

by Dr.K.Subashini
0 comment
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று  சுதந்திரத்திற்கு முந்தைய இலங்கையிலிருந்து தமிழகத்திற்குத் திரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கையேடு மின்னூலாக இணைகின்றது.
கையேடு:   இலங்கையிலிருந்து தாயகம் திரும்புகின்றவர்களுக்கு ஒரு வழிகாட்டி
பதிப்பு: மெட்ராஸ் கத்தோலிக்க சங்கம்
நூலைப் பற்றி
மலையகத்தில் காப்பித் தோட்டங்களிலும் தேயிலைத் தோட்டங்களிலும் பணியாற்றச் சென்ற தமிழக மக்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் தமிழகத்திற்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர், அல்லது பல்வேறு காரணங்களால் தாய் தமிழகத்திற்குத் திரும்பி வந்தனர். அப்படி திரும்பி வந்தோரில் பலருக்குப் பயண வழிகாட்டியாக இக்கையேடு அமைகின்றது. முழுவதும் தமிழில் உருவாக்கப்பட்ட கையேடு இது.
இந்தக் கையேட்டில்
  • குடும்ப அட்டை
  • ஏமாற்றுக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருத்தல்
  • தேயிலை தோட்டப்பணி
  • தொழிற்சாலையில் பணி
  • சொந்தத் தொழில் நடத்துதல்
  • விவசாயம் – புறம்போக்கு நிலங்கள் தொடர்பான எச்சரிக்கை
  • பயணத்தைத் திட்டமிட வழிகாட்டி (அம்மிக்குழவியையெல்லாம் தூக்கி வரவேண்டாம் என அறிவுரை)
  • தலைமன்னாற், இராமேஸ்வரம் வழியாக தமிழகப் பயணம்
  • ரயில் பதிவு, படகு பயணம்
  • சுங்கச் சோதனை
  • மண்டபம் (கேம்ப்)
  • அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்யவேண்டும்
  • உதவிக்கு தொடர்பு தகவல்
  • பயண கட்டண விபரங்கள்
எனப் பிரிவுகளாகப் பிரித்து விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பிரிட்டிஷ் காலணித்துவ காலத்தில் தமிழகத்திலிருந்து இலங்கைக்குத்  தொழில்புரிய வந்த மக்கள் மீண்டும் தாயகம் திரும்பும் போது  தேவைப்படும் ஆலோசனைகளை வழங்கும்  ஆவணங்களில் ஒன்றாக  இதனைக் கருதலாம்.
நன்றி-
சேகரிப்பு:திரு.ராஜசேகரன், மலையகம், இலங்கை. 
மின்னாக்கம், மின்னூலாக்கம்: முனைவர்.சுபாஷிணி , ஜெர்மனி
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 47
நூலை  வாசிக்க இங்கே அழுத்தவும்!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like

Leave a Comment