சு.இராஜசேகரன் –
சுமார்1957க்கு முன்பு மலையகப்பகுதுகளிள் நாட்டு (கிராமிய)சிங்களவர் “மையொக்கா, மையொக்கா கொலை, பொலஸ்” எனசப்தமிட்ட படி எமது லயத்து பக்கம் வந்து மரவள்ளி கிழங்கு, மரவள்ளி இலை, பலாக்கா விற்று அதன் மூலம் கிடைத்த சில்லரை யாக இருந்தாலும், மாற்றாக தேயிலையை பெற்றுக் கொண்டாலும் அம்மா கொடுத்த தேனீரை அருந்திவிட்டு சென்ற தும், சில வேளை நாட்டுபக்கம் நாம் சென்று விட்டா லும் அவர்கள் எம்மிடம் காட்டிய பரிவு மறக்க முடியாது.
இன்றும் சில இடங்களில் உண்டு.கடை வீதிக்குச் சென்றால் அவர்கள் எம்மிடம் பரிவு , காட்டிய வியாபாரம் தந்திம், இன்றும் மனக்கண்ணில் தோன் றுகிறது, வட்டகொடைப்பகுதியில் வியாபாரம்
செய்த ‘சாமலப்பு கடை, களஞ்சூரியா கடை, இனியா ப்பு முதளாலி, லியணகே தேத்தண்ணி கடை, சட்டி பானை கடை போன்ற வர்களையும் மறக்க முடியவில்லை.இப்படி வாழ்ந்த எமக்குள் இன்று துவேசப் பார்வை தோன்ற மூலக்காரணமே அரசியல். இந்த அரசியல் வாதிகளால் நாம் பாதிக்கப்பட்டாலும் சில தோட்டப் பகுதிகளில் பெண் கொடுத்து, பெண் எடுத்துள்ளோம் என சற்று நிம்மதி.