கலாநிதி சுபாசினி அவர்களின் விதந்துரையின் பெயரில் தமிழ் மரபு அறக்கட்டளை ஐரோப்பிய கிளையினரின் சார்பில் குரும்பசிட்டி ஆரம்ப பாடசாலை அபிவிருத்திக்கு உதவுமுகமாக 50.000,- இலங்கை ரூபாய்கள் பாடசாலை அபிவிருத்தி தலைவரிடம் அங்கு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ் மரபு அறக்கட்டளை இலங்கைக்கிளை பொறுப்பாளர் வலன்ரீனா இளங்கோவனின் ஏற்பாட்டின் படி ஐரோப்பியக் கிளை செயலாளர் திரு.யோகநாதன் புத்ரா அவர்களால் நேரடியாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் திரு.யோகநாதன் புத்ராவின் சிறு உரையும் நிகழ்த்தப்பட்டது.
தமிழ் மரபு அறக்கட்டளை தோற்றுநர் முனைவர் சுபாஷினி அவர்களும் அமைப்பின் உறுப்பினர்களான திரு. யோகநாதன் புத்ரா , திருமதி தர்மசீலி அவர்களும் இணைந்து வழங்கிய 50 000 ரூபா நிதியானது தமிழ் மரபு அறக்கட்டளை இலங்கை அமைப்பினூடாக திரு. யோகநாதன் புத்ரா அவர்களால் போரினால் பாதிக்கப்பட்டு மீள் எழுச்சி கண்டுவரும் யாழ் குரும்பசிட்டி பொன்பரமானந்தர் மகா வித்தியாயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான உணவு உண்ணும் வாங்கு மேசைகள் செய்வதற்காக பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இலங்கை தமிழ் மரபுஅறக்கட்டளையின் சார்பில் உதவிய நண்பர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.