Home புகைப்படங்கள் அரைப்படி அரிசி பஞ்சம்

அரைப்படி அரிசி பஞ்சம்

by Dr.K.Subashini
0 comment

” அரைப்படி அரிசி பஞ்சம்”

சு.இராஜசேகரன்

1973ம் ஆண்டு பஞ்சத்தை பற்றி இன்றைய இளசு களுக்கு ஓரளவு சில மூத்தோரால் கேள்விப்பட்டிரு ப்பார்கள். அப்படி இருக்க, பஞ்சத்திலே இது என்ன புதுமுறைப் பஞ்சம் என நினைக்கத் தோன்றுகி றதா…?

1939ம் ஆண்டு காலப் பகுதியில் உலக பொருளாதார நெருக்கடியின் விளைவாக உலக சந்தையில் தேயி லையும், இறப்பரும் விலையில் பெரும் வீழ்ச்சி கண்டது. உலகப் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட வறுமையின் கொடுமையை முழு இலங் கையையுமே பாதித்தது.

தோட்டத்தொழிலாளர்கள் இதனை “அரைப்படி அரிசி பஞ்சம்” என்றே அழை த்தார்கள். காரணம் தோட்டத்தொழிலாளர்களுக்கு அக்காலப்பகுதியில் ஒரு படி அரிசி கொடுக்கப்பட்டு ,அதனை திடீரென அரை படியாக கொடுக்கவே அப்படி அழைத்தா ர்கள்.

இக்காலப்பகுதியில் அரிசி வியாபாரத்தில் கொழு ம்பு போன்ற நகரில் இந்திய வர்த்தகர்களும் ,கடை காரர்களுமே வியாாரத்தில் கொள்ளை இலாபம் அடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்போதை சிங்களத் தலைமைகளால் இந்திய வர் த்தகர்களின் மேல் ஏற்பட்ட காழ்புணர்ச்சி காரமாக வே “இந்தியர் எதிர்ப்பு” போராட்டமானது ஆரம்பமா கியது. இதுவே மேலும் தீயிலே வார்த்த எண்ணை யை போல,இந்திய வம்சாவழியினர் அனைவரது மேலும் திரும்பக் காரணங்களில் ஒன்றாகவும் அமைந்தது.

 

You may also like

Leave a Comment